முகப்பு
தற்போதைய செய்திகள்

கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை : மாசுகட்டுப்பாட்டு வாரியம்

கழிவுநீரை வெளியேற்றும் சாய, தோல் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் சாய, சலவை மற்றும் தோல் ஆலைகளில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:08 AM
பகிர்:

கழிவுநீரை வெளியேற்றும் சாய, தோல் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் சாய, சலவை மற்றும் தோல் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி காவிரி ஆற்றிலும், காலிங்கராயன், சுண்ணாம்பு ஓடை, பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை போன்ற நீர்நிலைகளில் கலந்து வருகிறது.

இதனால் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மட்டுமின்றி குடிநீரும் மாசுபட்டு வருகிறது.

இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியது:

 மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்புக்குழு சார்பில் ஈரோடு வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் சாய,  சலவை, தோல் ஆலைகளின் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு முதல் இதுவரை அனுமதி இன்றி இயங்கி வந்த 240 சாய, சலவை ஆலைகள் இடித்தும், 80 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும், 30 ஆலைகள் முழுமையாக காலி செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 கடந்த 4 ஆண்டுகளில் ஈரோடு வட்டத்தில் குறிப்பாக ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றியும், விதிமுறை மீறியும் இயங்கி வந்த 350 சாய, சலவை, தோல் ஆலைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.  

 தற்போது ஈரோடு வட்டத்தில் 29 தோல் பதனிடும் ஆலைகளும், 31 சாய தொழிற்சாலைகளும், 79 சாய, சலவை மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. கழிவுநீரை வெளியேற்றும் சாய, தோல் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.