முகப்பு
தற்போதைய செய்திகள்

சாலையோர மரத்தில் கார் மோதி 3 பேர் சாவு

மனப்பாறையிலிருந்து வேலூருக்கு சென்ற காரில், வேலூரை சேர்ந்த சு. பாண்டுரங்கன் (60), அவரது மகள் கிருஷ்ணமூர்த்தி மனைவி அமுதவள்ளி (35), பாண்டுரங்கனின் நண்பர் குப்புசாமி (52) ஆகியோர் பயணம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:03 AM
பகிர்:

பெரம்பலூர் அருகே, சனிக்கிழமை மாலை சாலையோர மரத்தில் கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

மனப்பாறையிலிருந்து வேலூருக்கு சென்ற காரில், வேலூரை சேர்ந்த சு. பாண்டுரங்கன் (60), அவரது மகள் கிருஷ்ணமூர்த்தி மனைவி அமுதவள்ளி (35), பாண்டுரங்கனின் நண்பர் குப்புசாமி (52) ஆகியோர் பயணம் செய்தனர். காரை, திருச்சியை சேர்ந்த கணேசன் மகன் விஜய் (33) ஓட்டி வந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூர் அருகே உள்ள பெருமாள் பாளையம் பிரிவுசாலை அருகே சனிக்கிழமை மாலை சென்றபோது, காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பாண்டுரெங்கனும், குப்புசாமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த பாடாலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய அமுதவள்ளி, ஓட்டுநர் விஜய் ஆகியோரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அமுதவள்ளி உயிரிழந்தார். ஓட்டுநர் விஜய் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →