முகப்பு
தற்போதைய செய்திகள்

கடையநல்லூர் அருகே ஆட்டோ - வேன் மோதல்: 2 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடியில் இருந்து கடையநல்லூருக்கு தக்காளிக் கூடைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்தது. ஆட்டோவை ஆய்க்குடி அருகே உள்ள வயல்காட்டுக்காலனியைச் சேர்ந்த வீரமணி ஓட்டி வந்தார். அதில் தக்காளிக் கூடைகளுடன் விவசாயி

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:03 AM
பகிர்:

கடையநல்லூர் அருகே ஆட்டோ - வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடியில் இருந்து கடையநல்லூருக்கு தக்காளிக் கூடைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்தது. ஆட்டோவை ஆய்க்குடி அருகே உள்ள வயல்காட்டுக்காலனியைச் சேர்ந்த வீரமணி ஓட்டி வந்தார். அதில் தக்காளிக் கூடைகளுடன் விவசாயி மூக்கையா வந்தார். இவர்கள் வந்த ஆட்டோ, கடையநல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகே சேலத்தில் இருந்து குற்றாலம் நோக்கிச் சென்ற வேனுடன் மோதியது. இந்த விபத்தில் வீரமணி, மூக்கையா இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →