திருச்சி விமான நிலையத்தில் 540 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்தவரிடம் இருந்து 540 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்தவரிடம் இருந்து 540 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் நேற்று இரவு பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்த முகமது நபீர் முகமது யூசூப் மற்றும், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நூர் ஆகிய 3 பேரிடம் இருந்து 540 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் நண்பர்கள் தங்கள் பேண்ட் பாக்கெட்டில் ஒளித்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.