வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் கனவு நிறைவேறாது என எண்ணி இளைஞர் தற்கொலை
பழனி அருகே வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் கனவு நனவாகாததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பழனி அருகே வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் கனவு நனவாகாததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பழனி அருகே சின்னக்கலையமுத்தூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரவி(55). இவரது மகன் அருண்குமார்(27). பொறியியல் பட்டதாரியான இவருக்கு திருமணமாகி 18 மாதம் நிறைந்த நிலையில் மனைவி பிரசவத்துக்காக சொந்த ஊரான வால்பாறைக்குச் சென்றுள்ளார். அருண்குமார் வெளிநாட்டுக்குச் சென்று வேலைபார்க்க வேண்டும் என்ற ஆசையால் திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு ஏஜெண்ட்டிடம் ரூபாய் எட்டாயிரத்து ஐநாறு கொடுத்து வேலை வாங்கித் தரச் சொல்லியுள்ளார். இந்நிலையில் பாஸ்போர்ட், விசா எனவும் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளார்.
சில நாட்களில் சிங்கப்பூர் செல்ல தயாராகும்படி ஏஜெண்ட் கூறிவிட்டதாகவும், அங்கு தங்க, சாப்பிட ஆகும் செலவுக்கு சிலஆயிரம் வேண்டும் என அருண்குமார் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனால் ரவி தனது மனைவியின் உறவினர்களிடம் கடனாக பணம் வாங்கி வர சென்றுள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது அருண்குமார் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாதோ என்ற ஏக்கத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.