தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் படுகாயம்

சாத்தூர் அருகே படந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(45).இவருக்கு  சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை விருதுநகர் அருகே ஆவுடையாபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு புதன்கிழமை காலையில்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் வேனிலிருந்து தீக்குச்சி மூட்டைகளை இறக்கும் போது உராய்வினால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.

சாத்தூர் அருகே படந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(45).இவருக்கு  சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை விருதுநகர் அருகே ஆவுடையாபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு புதன்கிழமை காலையில் தீப்பெட்டி ஆலையில் தயாரித்த செய்த தீக்குச்சி மூட்டைகளை வேனில் ஏற்றிபெட்டிகளில் அடைப்பதற்கு மற்றொரு பகுதியில் இருக்கும் பண்டல்கள் பேக்கிங்போடும் அறைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த மூட்டைகளை மன்னார்கோட்டையைச் சேர்ந்த ஆலைத் தொழிலாளி முத்தையா(42) இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.அப்போது, திக்குச்சிகளில் ஏற்பட்ட உராய்வினால் திடீர் விபத்து ஏற்பட்டது.இதில் உடனே சுதாரித்துக் கொண்ட தொழிலாளி முத்தையா வேனிலிருந்து கீழே குதித்த போது படுகாயம் அடைந்தார். அதையடுத்து, ஆலைக்குள் பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறி உயிர் தப்பினார்கள்.

பின்னர் இது குறித்து தொழிலாளர்கள் சாத்தூர் மற்றும் விருதுநகர்தீயனைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ ஆலை முழுவதும் மளமளவென பரவியது. இதில், தீக்குச்சி ஏற்றி வந்த வேன் மற்றும் அந்த அறையில் இருந்து தீக்குச்சி மூட்டைகள், தாயர் செய்யப்பட்ட பெட்டிகள் மற்றும் பண்டல்கள் ஆகியவைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த முத்தையாவை சிகிச்சைக்காக சாத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

SCROLL FOR NEXT