முகப்பு
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் காயமடைந்த தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சாவு

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (54). இவர்,  புதுக்கோட்டையில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையராக பணியாற்றி வந்தார். இவர், அரசு ஜீப்பில் சனிக்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:07 AM
பகிர்:

வல்லநாடு அருகே சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமைடந்த தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (54). இவர்,  புதுக்கோட்டையில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையராக பணியாற்றி வந்தார். இவர், அரசு ஜீப்பில் சனிக்கிழமை மாலை புதுக்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்குச் சென்று கொண்டிருந்தாராம்.

ஜீப்பை ஓட்டுநர் ராஜா (32) ஓட்டிச் சென்றார்.  வல்லநாடு துப்பாக்கி சூடுதளம் அருகே சென்றபோது திடீரென ஜீப்பின்  டயர் வெடித்ததால் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சோமசுந்தரம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சோமசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார். ஓட்டுநர் ராஜாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து முறப்பநாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.