முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.3.5 கோடி காருக்கு ஆசைப்பட்டு, ரூ.3.11 லட்சம் இழந்த முதியவர்: அலைக்கழிக்கும் காவல் துறை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆன்லைனில் ரூ.3.5 கோடி மதிப்பிலான கார் பரிசாக விழுந்துள்ளதாக வந்ததை நம்பி, ரூ.3.11 லட்சத்தை இழந்துள்ளார் முதியவர். குற்றவாளிகள் குறித்த அனைத்து

தற்போதைய செய்திகள்

ரூ.3.5 கோடி காருக்கு ஆசைப்பட்டு, ரூ.3.11 லட்சம் இழந்த முதியவர்: அலைக்கழிக்கும் காவல் துறை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆன்லைனில் ரூ.3.5 கோடி மதிப்பிலான கார் பரிசாக விழுந்துள்ளதாக வந்ததை நம்பி, ரூ.3.11 லட்சத்தை இழந்துள்ளார் முதியவர். குற்றவாளிகள் குறித்த அனைத்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:07 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆன்லைனில் ரூ.3.5 கோடி மதிப்பிலான கார் பரிசாக விழுந்துள்ளதாக வந்ததை நம்பி, ரூ.3.11 லட்சத்தை இழந்துள்ளார் முதியவர். குற்றவாளிகள் குறித்த அனைத்து புள்ளி விவரங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளிடம் வழங்கி 6 மாதம் ஆகியுள்ள நிலையில் குற்றவாளிகள் வேற்று மாநிலத்தில் உள்ளதால் காவல் துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்டுவர் புகார் கூறியுள்ளார்.

இது குறித்த விவரம்:

ஸ்ரீவில்லிபுத்தூர், கூனங்குளம் மேல் பக்கம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் எஸ்.முருகசேன் (68). இவர் ஓய்வு பெற்ற மில் தொழிலாளி. இவர் வியாபாரம் தொடர்பாக இன்டர்நெட் பயன்படுத்தி வருகிறார். 9.3.14-ம் தேதி இவர் பயன்படுத்தும் இமெயில் முகவரிக்கு, ஒரு இமெயில் வந்துள்ளது. அதில் ரூ.3.50 கோடி மதிப்புள்ள (Chevrolet Car) வெளிநாட்டு கார் பரிசு விழுந்திருப்பதாக கூறப்பட்டிருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மார்க்பிலிப் என்பவர் எஸ்.எம்.எஸ். மூலம் கஸ்டம்ஸ் கிளியரன்ஸிற்காக ரூ.21,500-ம், சட்ட அங்கீகாரத்திற்காக ரூ.1 லட்சமும், United Nations Anti-Terrorist Department-ன் Anti Drug/Terrorist Clearance-க்காக ரூ.2 லட்சமும் கட்ட வேண்டும் என்று படிப்படியாக தெரிவித்து வந்துள்ளார். இதனை நம்பிய முருகேசன், ஸ்ரீவில்லிபுத்தூர் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ராஜபாளையம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மூலம் பணத்தைக் கட்டியுள்ளார்.

இந்நிலையில் 14.3.14-ம் மேலும் ஒரு இமெயில் வந்துள்ளது. அதில் 95 சதவீதம் உங்களது பணிகள் முடிந்துவிட்டது. மேலும் 5 சதவீத பணிகளுக்காக ரூ.1.60 லட்சம் வரி கட்ட வேண்டும் என்று வந்துள்ளது. இதில் சந்தேகம் அடைந்த முருகேசன் மறுநாளே விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து இது குறித்து விரிவான மனுவை அளித்தார். அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் விசாரிக்க உத்தரவிட்டார். அவர்கள் ஜூரோ குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் மோசடி செய்தவர்களின் செல்போன் எண்கள், அவர்கள் பயன்படுத்திய கணினியின் ரகசிய எண்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கண்டு பிடித்தனர். இது குறித்து இரு வங்கிகளுக்கும் முருகேசன் புகார் செய்தார். பாரத ஸ்ட்டே வங்கியிலிருந்து வந்த பதிலில், இந்த மோசடியில் ஈடுபட்ட மார்க்பிலிப் என்பவர் கணக்கில் ஒரே மாதத்தில் ரூ.1 கோடிக்கு பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். 5 வங்கிக் கணக்குகளில் இருந்து இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இவர்களது வருமான வரி கணக்கு எண் உள்ளிட்டவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது போலீஸாரிடம் கேட்டால், இது ரூ.3 லட்சத்திற்கு மேலான மோசடி என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. எனவே இதனை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க வேண்டும். அவர்கள் விசாரணைக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் விசாரித்தால், இங்கு இது போன்ற ஒரு மனு வரவே இல்லை என்கிறார்கள் என்று கூறும் முருகேசன், போலீஸார் இது விஷயத்தில் துரித நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இதுபோன்று யாரும் ஏமாறாத வகையில் சட்டங்களை கடுமையாக்கி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →