விருதுநகரில் லாரி திருடிய சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து 5 லாரிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் அருகே மூளிப்பட்டியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விருதுநகர்-சிவகாசி சாலையில் லாரி புக்கிங் அலுவலகத்திற்கு முன்பு சரக்கு ஏற்றுவதற்காக நிறுத்தி வைத்து கடைக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும் போது புக்கிங் அலுவலகத்திற்கு முன்பு நிறுத்தியிருந்த லாரி யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதேபோல், சிவகாசியில் ஜேசுராஜ் என்பவரது லாரி உள்ளிட்ட 4 லாரிகள் திருடு போனாது.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் உத்தரவின்பேரில் காணமல் போன லாரிகள் குறித்து விசாரணை செய்வதற்கு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விருதுநகர் மேற்கு காவல் நிலைய சார்புஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் 4 போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். அப்போது, லாரியுடன் காணமல் போன கைப்பேசியின் எண்ணை வைத்துபேசியதின் அடிப்படையில் திருடர்கள் திருச்சியில் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சி இந்திரா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த செந்தில்குமார்(26) போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது லாரி இருக்குமிடங்களை கண்காணித்து நண்பர்கள் உதவியுடன் திருடுவோம்.அதையடுத்து இயந்திர பாகங்களை பிரித்து, மற்றொரு லாரியின் பாகங்களை பொறுத்துவதும், வண்ணக்கலர் பூசி ஆவணங்கள் தயாரித்து விற்று வந்ததாகவும் தெரிவித்தாராம். அதன் அடிப்படையில் திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த செந்தில்குமார்(27), ஹூசைன்(64) மற்றும் எலியார்(54) ஆகியோரை மேற்குகாவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அதோடு, அவர்களிடம் இருந்த 5 லாரிகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.