கலசலிங்கம் பல்கலை.யில் சூரிய மின் சக்தி ஆராய்ச்சி: மத்திய அறிவியல் ஆராய்ச்சி கழகம் ரூ.6.59 லட்சம் நிதியுதவி
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழத்தில் சூரிய மின் சக்தி குறித்து ஆராய்ச்சி செய்தவற்கு மத்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் இரு பேராசிரியர்களுக்கு ரூ.6.59 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.
தற்போதைய செய்திகள்கலசலிங்கம் பல்கலை.யில் சூரிய மின் சக்தி ஆராய்ச்சி: மத்திய அறிவியல் ஆராய்ச்சி கழகம் ரூ.6.59 லட்சம் நிதியுதவி
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழத்தில் சூரிய மின் சக்தி குறித்து ஆராய்ச்சி செய்தவற்கு மத்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் இரு பேராசிரியர்களுக்கு ரூ.6.59 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழத்தில் சூரிய மின் சக்தி குறித்து ஆராய்ச்சி செய்தவற்கு மத்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் இரு பேராசிரியர்களுக்கு ரூ.6.59 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அகாடமிக் டீன் டாக்டர் டி.தேவராஜ் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பேராசிரியை கே.புனிதா ஆகிய இருவரும் சேர்ந்து சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் புதிய யுக்தியை கண்டு பிடிப்பதற்காக புதுதில்லியில் உள்ள மத்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்திற்கு ஆராய்ச்சி கழகத்திற்கு ஆராய்ச்சி கட்டுரையை அனுப்பியிருந்தனர்.
பின்னர் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் பேராசிரியர்கள் கலந்து கொண்ட ஆராய்ச்சி கருத்தரங்கில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்து விளக்கனர்.
கருத்தரங்கின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் குழு, டாக்டர் தேவராஜ், பேராசிரியை புனிதா ஆகியோரின் ஆராய்ச்சியை முதன்மையைகத் தேர்ந்தெடுத்து. மேலும் இது தொடர்பான ஆராய்ச்சியை கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்வதற்கு ரூ.6.59 லட்சத்தை மத்திய அறிவியல் ஆராய்ச்சி கழகம் ஒதுக்கீடு செய்துள்ளது.தற்போது சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும்போது 16 முதல் 20 சதவீதம் சூரிய ஒளிதான் பயன்படுத்த முடிகிறது. மேலும் சிறிது ஒளி குறைந்தாலும் மின்சாரம் தயாரிப்பது தடைபடும். கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தேவராஜ் மற்றும் புனிதா ஆகியோர், புதிய அல்காரிதம் சர்க்யூட் ஒன்றை ஏற்படுத்தி அதை மின்சக்தி இறுதியாக கிடைக்கும் வழியில் பொருத்தினார்கள். இதன் மூலம் 100 சதவீதம் சூரிய ஒளியை பயன்படுத்தி, சூரிய ஒளி சிறிதும் வீணாகாமல் இறுதியாக அதிக மின்சாரம் கிடைக்கும்.
இவர்கள் கண்ட புதிய சர்க்யூட்டில் ஃபஸி கண்ட்ரோலர், அல்காரிதம் கடினபொருள் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் மேக மூட்டத்திலும், மரங்கள் மறைத்தாலும் சூரிய ஒளி குறைந்தாலும் அதனை முழுமையாக பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். அதற்காக புதிய ஃபஸி லாஜிக் ஸிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசு நிதியுதவியுடன் கலசலிங்கம் பல்கலைக்கழக சர்வதேச ஆராய்ச்சிக் கூடத்தில் புதிய சூரிய ஒளி மின்சக்தி ஆராய்ச்சியில் ஈடுபடும் பேராசிரியர்களை, வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.