நெல்லையில் வழக்குரை மிரட்டிய ஒருவர் கைது: துப்பாக்கி பறிமுதல்
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. வழக்குரைஞரான இவர், தனது பைக்கில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது தனியார்
திருநெல்வேலியில் வழக்குரைஞரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. வழக்குரைஞரான இவர், தனது பைக்கில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது தனியார் ஹோட்டல் அருகே இவருக்கும், அவ்வழியாக காரில் வந்த திருநெல்வேலி தெற்கு பாலபாக்யா நகரைச் சேர்ந்த ஜமால்மைதீன் மகன் மைதீன்பிச்சைக்கும் (39) வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி மைதீன்பிச்சை மிரட்டியதாக, திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் பிரபு புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து மைதீன்பிச்சையை கைது செய்தனர். மேலும், துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்தத் துப்பாக்கி லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி என தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.