முகப்பு
தற்போதைய செய்திகள்

கே.ஐ.டி.யில் 8-வது அணி பொறியியில் பட்டப் படிப்பு தொடக்க விழா

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் 8-வது அணி பொறியியல் பட்டப் படிப்பு தொடக்க விழா பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.முதல்வர் டாக்டர் எஸ்.ஆர்.ஸ்ரீகுமார் வரவேற்று, வாழ்த்துரை வழங்கினார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:28 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் 8-வது அணி பொறியியல் பட்டப் படிப்பு தொடக்க விழா பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.முதல்வர் டாக்டர் எஸ்.ஆர்.ஸ்ரீகுமார் வரவேற்று, வாழ்த்துரை வழங்கினார்.

அமெரிக்கா பிட்ஸ்பர்க், கார்னிகே மில்லன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ராஜா சூரியமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, புதிய அணியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:மாணவர்கள் படிக்கும்போது அறிவு, ஒழுக்கம், திறமை ஆகிய மூன்றையும் வளர்க்க அயராது பாடுபடவேண்டும்.

இந்தியாவில் பெண் தொழிலதிபர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனை அதிகரிக்க மாணவிகள் நன்கு பயிற்சி எடுத்து தொழிற்சாலைகள் ஆரம்பித்து தொழில் அதிபராக மாற வேண்டும். ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகளை மாணவிகள் ஏற்படுத்தித் தருபவர்களாக உயர வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் கலசலிங்கம் கல்வி குழுமத்தின் நிர்வாக அதிகாரி கருப்பசாமி, கல்வி நிறுவங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் பி.சிவக்குமார் நன்றி கூறினார்.பின்னர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் டைபாக்கோர் வளாகத்தில் தி ஏஜ் ஆப் பிக் டேட்டா என்ற தலைப்பில் தகவல்கள் சேமிக்கப்படும் புதிய முறைகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதிலும் டாக்டர் ராஜா சூரியமூர்த்தி கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்.

முழு கட்டுரையைப் படிக்க →