முகப்பு
தற்போதைய செய்திகள்

திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய அரசு ஊழியர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் மாரச்சந்திரம் அருகே உள்ள குப்பச்சிபாறை கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் (30). இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் கடந்த 2005 ஆண்டு முதல்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:29 AM
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய அரசு ஊழியர் உள்ளிட்ட 3 பேர் மீது கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாரச்சந்திரம் அருகே உள்ள குப்பச்சிபாறை கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் (30). இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் கடந்த 2005 ஆண்டு முதல் காதலித்தாராம்.  மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தாராம். இந்த நிலையில், வேடியப்பனின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது.  இதனால் ஆத்திரமடைந்த வேடியப்பனின் பெற்றோர், அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று மிரட்டல் விடுத்தார்களாம்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேடியப்பன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த பாதிக்கப்பட்ட இளம்பெண், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தை அடுத்து, காவல் ஆய்வாளர் தேவீகாராணி, வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →