முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் ஆவின் பாலகத்தில் கொதிநீர் கசிந்து 2 பேர் காயம்

திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் தமிழக அரசுக்குச் சொந்தமான ஆவின் பாலகம் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயிகளிடம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:29 AM
பகிர்:

திருநெல்வேலி ஆவின் பாலகத்தில் புதன்கிழமை இரவு கொதிநீர் கசிந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் தமிழக அரசுக்குச் சொந்தமான ஆவின் பாலகம் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயிகளிடம் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் சேகரிக்கப்படும் பால் முழுவதும் இந்த மையத்திற்கு கொண்டு வந்து பதப்படுத்தப்பட்டு, தரம்பிரிக்கப்படுகிறது. தினமும் குறைந்தது 50 ஆயிரம் லிட்டர் பால் இந்த மையத்தில் தரம்பிரிக்கப்பட்டு, 250, 500 மில்லி லிட்டர், ஒரு லிட்டர் பாக்கெட்டுகளாக தயாரிக்கப்படுகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தப் பாலகத்தில் எலக்ட்ரீஷியன் பிரிவில் பணியாற்றி வரும் ரெட்டியார்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த பிச்சையா மகன் பெரியநாயகம் (55), மேலப்பாளையத்தைச் சேர்ந்த மஜீத் (50) ஆகியோர் புதன்கிழமை இரவு பணியில் இருந்தனராம். அப்போது பாலை பதப்படுத்தப் பயன்படும் கொதிகலனின் திறப்பான் திடீரென திறந்து, கொதிநீர் கசிந்துள்ளது.இதில் பெரியநாயகம் காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக பெருமாள்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். லேசான காயமடைந்த மஜீத் புறநோயாளியாக சிகிச்சைப் பெற்று சென்றார்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →