சுதந்திர தின விழாவில் திருநெல்வேலியில் இளைஞர் தீ குளிக்க முயற்சி
திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தலைமையில் அண்னா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது.
திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தலைமையில் அண்னா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது.
மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றியதும் காவல் துறையினரின் மரியாதை அணிவகுப்பை ஏற்பதற்காக ஜீப்பில் ஏறிய போது கூட்டத்தில் இருந்து ஓடிவந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றார்.
அப்போது போலீஸார் அவரை அங்கு இருந்து அப்புறபடுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் யார் ஏன் தீ குளிக்க முயன்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.