முகப்பு
தற்போதைய செய்திகள்

பிச்சாவரம் கடலில் குளித்த அண்ணாமலைப் பல்கலை மாணவர் நீரில் மூழ்கி சாவு

சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரம் கடலில் நண்பர்களுடன் குளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார். மற்ற 5 மாணவர்கள் தப்பி கரையேறினர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:30 AM
பகிர்:

சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரம் கடலில் நண்பர்களுடன் குளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார். மற்ற 5 மாணவர்கள் தப்பி கரையேறினர்.

உத்திரப்பிரதேசம் மாநிலம் ஜாம்பூர் மாவட்டம் உசேனாபாத் என்ற ஊரைச் சேர்ந்த சாலிகிராம் யாதவ் மகன் அலோக்குமார் யாதவ் (21). இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி பிஇ எலக்டிரிகல் அன்ட் எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் சனிக்கிழமை விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் விக்ரம்ராஜ், குமித்குமார், சந்தோஷ்குமார் உள்ளிட்ட 5 பேருடன் சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரம் சென்றுள்ளார். அங்கிருந்து படகில் எம்ஜிஆர் திட்டு பகுதிக்கு 6 மாணவர்களும் சென்றுள்ளனர். அப்பகுதியில் உள்ள கடலில் 6 பேரும் குளித்துள்ளனர். இதில் கடல் அலையில் சிக்கி அலோக்குமார் யாதவ் நீரில் மூழ்கி காணாமல் போனார். மற்ற 5 மாணவர்கள் தப்பி கரையேறினர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மீனவர்கள் அவரது உடலை தேடி வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை மாலை அவரது உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த கிள்ளை போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.