முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் மின்வாரிய பொறியாளர் வீட்டு ஜன்னலை உடைத்து 25 பவுன் நகைகள் திருட்டு

சிதம்பரத்தில் மின்வாரிய உதவி செயற்பொறியாளரின் பூட்டியிருந்த வீட்டின் ஜன்னலை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:30 AM
பகிர்:

சிதம்பரத்தில் மின்வாரிய உதவி செயற்பொறியாளரின் பூட்டியிருந்த வீட்டின் ஜன்னலை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள விபீஷணபுரம் முருகேசன் நகரில் வசிப்பவர் ராஜேந்திரன் (51). இவர் பண்ருட்டி மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளராக பணியாற்றுகிறார். சனிக்கிழமை காலை இவர் வீட்டை பூட்டிக்கொண்டு தனது மனைவி தமயந்தியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை சென்றார். பின்னர் சென்னையிலிருந்து நள்ளிரவு ஆம்னி பேருந்தில் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிதம்பரம் வந்து வீடு திரும்பினார். வீட்டினை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது மர்மஆசாமிகள் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து வீட்டு பீரோவிலிருந்த 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்து அதிர்ச்சியுற்றனர். இதுகுறித்து ராஜேந்திரன் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.