முகப்பு
தற்போதைய செய்திகள்

மலைப்பாம்பு கடித்து இளைஞர் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை மலைப்பாம்பு கடித்ததில் இளைஞர் காயம் அடைந்தார்.

தற்போதைய செய்திகள்

மலைப்பாம்பு கடித்து இளைஞர் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை மலைப்பாம்பு கடித்ததில் இளைஞர் காயம் அடைந்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:31 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை மலைப்பாம்பு கடித்ததில் இளைஞர் காயம் அடைந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை, அண்ணாநகர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மாயக்கண்ணன் (29). இவர் ஆடுகளை செண்பகத்தோப்பு-பேச்சியம்மன்கோவில் அருகே மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது மலைப்பாம்பு ஒன்று மாயக்கண்ணனை கால் மடங்கும் முட்டியின் பின்புறம் கடித்துள்ளது. இதில் அந்த இடத்தில் பெரிய கடிவாய் ஏற்பட்டது. இதனையடுத்து மாயக்கண்ணனை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் காளிராஜ், திங்கள்கிழமை இரவு கூறுகையில்: மலைப்பாம்பு கடித்தால் கூட விஷம் இல்லை. இவருக்கு பெரிய கடிவாய்தான் உள்ளது என்றார். தொடர்ந்து மாயக்கண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →