குற்றத்தடுப்பு முயற்சி: சேத்தியாத்தோப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் கடைவீதி மற்றும் முக்கிய சாலைகளில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கரின் தீவிர முயற்சியால் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் கடைவீதி மற்றும் முக்கிய சாலைகளில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கரின் தீவிர முயற்சியால் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ள கே.அம்பேத்கர், சேத்தியாத்தோப்பு பகுதியில் மக்கள் நலன் கருதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சேத்தியாத்தோப்பு கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்களை நிறுத்த சாலையோரம் ரோப்புகளை அமைத்து பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார்.
தற்போது சேத்தியாத்தோப்பு கடைவீதி, ராஜீவ்காந்தி சிலை அருகே, காவல் நிலையம் முன்பு உள்ளிட்ட 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் கடைவீதி பஸ்நிறுத்தத்தில் பள்ளி மாணவியர்கள், பெண்கள் பாதுகாப்பாக செல்லவும், திருட்டு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை அப்பகுதி மக்களும், வியாபாரிகளும், சமூக ஆர்வலர்களும், இன்ஸ்பெக்டக் கே.அம்பேத்கருக்கு மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர். இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்களிலும், முக்கிய சந்திப்புகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால், குற்றங்களை கண்காணிக்கவும், தடுக்கவும் உதவியாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.