ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்து சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் கடந்த இரு நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 187 பேர் ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழக நிர்வாகத்தை அரசு ஏற்றுக்கொண்ட பிறகு சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஓப்பந்தம் எடுத்துள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக மேற்கண்ட தொழிலாளர்களுக்கு, ஒப்பந்தக்காரர் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் கடந்த ஆக. 18,19 ஆகிய இரு தினங்களாக ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்த சிஐடியு மாவட்ட இணைச்செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு சம்பவ இடத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் தொலைபேசியில் பேசினார். அதில் தீர்வு ஏற்படவில்லை. இதனையடுத்து தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்றும், அடுத்த கட்ட போராட்டமாக வியாழக்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.