தற்போதைய செய்திகள்

செவிலியரிடம் பாலியல் வன்முறை: ஹோட்டல் ஊழியர்கள் இருவர் கைது

மத்திய தில்லியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த பெண்மணிக்கு சிசிக்சை அளிக்கச் செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த்ததாக, அந்த ஹோட்டலின் ஊழியர்கள்

வெங்கடேசன்

மத்திய தில்லியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த பெண்மணிக்கு சிசிக்சை அளிக்கச் செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த்ததாக, அந்த ஹோட்டலின் ஊழியர்கள் நீரஜ்(25), ராஜன் (23) இருவரையும் தில்லி போலீஸôர் கைது செய்தனர்.

 இது குறித்து தில்லி போலீஸ் உயர் அதிகாரி கூறியது:

ஹோட்டல் உரிமையாளர்,   இருதய நோய்க்கு சிகிச்சைப் பெற்று வரும் அவரது வயதான மனைவியை (80) கவனித்துக் கொள்வதற்காக  இரு இளைஞர்களையும், திபெத்தைச் சேர்ந்த செவிலியரையும்  இரு மாதங்களுக்கு முன் பணியில் அமர்த்தியுள்ளார்.  அந்த செவிலியர் அவரது கணவருடன் வடக்கு தில்லியில் வசித்து வருகிறார்.

 இந் நிலையில், வயதான பெண்மணிக்கு சிசிக்சை அளிக்க கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.15) ஹோட்டலுக்கு வந்த அந்த செவிலியரை,  இரு இளைஞர்களும் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாலியல் பலாத்காரம் குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

 இதைத் தொடர்ந்து, வீட்டுக்கு திரும்பிய அந்த செவிலியர் அவரது கணவரிடம் பாலியல் பலாத்காரம் குறித்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில், செவிலியருக்கு நடத்தப்பட்ட பாலியல் பலாத்காராம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதுடன், அந்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT