அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் மீது வழக்குப் பதிவு
பழனியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் நூறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் நூறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி காமராஜ் நகர் ஆக்கிரமிப்பை பொதுப்பணித்துறை எடுப்பதால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக தெரிவித்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஜெகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, முன்னாள் கவுன்சிலர் தீனதயாளன், விசுவ ஹிந்து பரிஷத் செந்தில்குமார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் செவ்வாய்க்கிழமை பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு எந்த முன்னனுமதியும் பெறப்படாததால் அவர்களை கலைந்து செல்லுமாறு தெரிவித்தும் கலைந்து செல்லாததால் சிவகிரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கருப்புச்சாமி கொடுத்த புகாரின் பேரில் இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட நூறு பேர் மீது பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.