போலீஸ் நிழற்குடையில் விளம்பரம்: விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி மீது வழக்குப் பதிவு
பழனியில் போலீஸ் நிழற்குடையில் விளம்பரம் செய்ததாக விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பழனியில் போலீஸ் நிழற்குடையில் விளம்பரம் செய்ததாக விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பழனி அடிவாரம் பாலாஜி பவன் அருகே போலீஸ் நவீன நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தமிழர் எழுச்சி பிறந்தநாள், கல்வி உரிமை மாநாடு, சிறுத்தைகளே சேலம் திரளட்டும் என்ற வாசகங்களை விளம்பரமாக எழுதியுள்ளனர். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அடிவாரம் போலீஸார் விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் பொதினிவளவன் என்ற அய்யப்பன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.