தற்போதைய செய்திகள்

பொட்டல்புதூரில் ஒருவரை கல்லால் அடித்துக் கொன்றதாக பிச்சையெடுப்பவர் கைது

பொட்டல்புதூரில் ஊனமுற்றவரை கல்லால் அடித்துக் கொலை. கல்லால் அடித்துக் கொன்றதாக பிச்சைக்காரர் கைது.

கு. அழகிய நம்பி

பொட்டல்புதூரில் ஊனமுற்றவரை கல்லால் அடித்துக் கொலை. கல்லால் அடித்துக் கொன்றதாக பிச்சைக்காரர் கைது.

பொட்டல்புதூர் வடக்குப் புதுமனைத் தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் முகமது சலீம் (45). இவர் கால் ஊனமுற்றவர் மேலும் இவருக்கு வலிப்பு நோய் உண்டாம். இதனால் வேலைக்குப் போவதில்லையாம். இவரது மனைவி செய்யதுஅலி பாத்திமா (40). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு முகமது அசாருதீன், முகமது சித்திக் என்ற மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முகமது சலீம் புதன்கிழமை காலை பொட்டல்புதூர் கடையம் சாலையில் கழிவு நீர் கால்வாயில் இறந்த நிலையில் கிடந்தார்.

தகவலறிந்து வந்த கடையம் காவல் ஆய்வாளர் முருகன், ஆழ்வார்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜ் ஆகியோர் உடலைக் கைப்பற்றி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் விசாரணையில் ஈடுபட்டிருந்த போது அந்தப் பகுதியில் சட்டை மற்றும் கைகளில் ரத்தக் கறையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்ததில் பொட்டல்புதூரைச் சேர்ந்த மைதீன் பிச்சை மகன் அப்துல் ரஹ்மான் (42) என்பது தெரிய வந்தது. இவர் பொட்டல்புதூர் பகுதியில் சிறு வயது முதலே பிச்சை எடுத்து வருகிறாராம். செவ்வாய்கிழமை இரவு இவர் பிச்சை எடுத்து சேகரித்து வைத்த பணத்தை முகமது சலீம் பறித்துக் கொண்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் ரஹ்மான், முகமது சலீமிடம் தகராறி ஈடுபட்டாராம். அப்போது திடீரென அருகில் இருந்த கல்லை எடுத்து முகமது சலீமின் தலையில் தாக்கினாராம். இதில் பலத்தக் காயமடைந்த முகமது சலீம் உயிரிழந்தார். அதன் பின் அவரது உடலை அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் இழுத்துப் போட்டு விட்டுச் சென்று விட்டாராம்.

இதனையடுத்து அப்துல் ரஹ்மானை ஆழ்வார்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜ் கைது செய்து வழக்குப் பதிவு செய்தார். மேலும் இது குறித்து கடையம் ஆய்வாளர் முருகன் விசாரணை செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT