முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று காலை 8.30மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஆண் ஒருவர் பேசியுள்ளா

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:37 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று காலை 8.30மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஆண் ஒருவர் பேசியுள்ளார். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கீழப்பூவாளி ஆகிய இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்றும், 15 பேர் இதற்காக அங்கே புகுந்துள்ளனர் என்றும் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதை அடுத்து போலீஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி பகுதியில் காலை பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.