பாபநாசத்தில் இருந்து திருப்பதி சென்ற பேருந்து, அம்பை - கல்லிடை சாலையில் இன்று மதியம் 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற ஆட்டோவின் மீது மோதியது. அப்போது, பஸ்ஸின் பின்னால் வள்ளியூரில் இருந்து அம்பைக்கு திருமண கோஷ்டியினர் சென்ற வேன் ஒன்று, பஸ்ஸுடன் மோதியது. இதில், வேனில் பயணம் செய்த 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் அம்பை - கல்லிடை சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.