நீர்பிடிப்பு பகுதியில் மழை: பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 46 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 18 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 3.2 மி.மீ மழையும், கருப்பாநதி அணையில் 16.5 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 32 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 30 மி.மீ மழையும், கொடுமுடியாறு அணையில் 20 மி.மீ மழையும், தென்காசியில் 13.1 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு:
சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்தது. கடந்த சில தினங்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 856 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்த பாபநாசம் அணைக்கு சனிக்கிழமை விநாடிக்கு 3,755 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதேபோல் சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 2,400 கனஅடி நீர்வரத்து இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 117 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 78 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 19 கனஅடியும், கருப்பாநதி, குண்டாறு அணைக்கு விநாடிக்கு தலா 10 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 81 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
நீர்மட்டம் உயர்வு:
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 78.10 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து 91.53 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 93.50 அடியாகவும் இருந்தது.மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 53.40 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 61.90 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 51.50 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 31.33 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 4 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 8.69 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 10 அடியாகவும் இருந்தது.