நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பு: நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளின் நீர்மட்டம் கணிசமாக
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 31 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 12 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 3.4 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 11 மி.மீ மழையும், ராமநதி அணையில் 19 மி.மீ மழையும், கருப்பாநதி அணையில் 15 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 29 மி.மீ மழையும்,அடவிநயினார் அணையில் 35 மி.மீ மழையும், கொடுமுடியாறு அணையில் 10 மி.மீ மழையும், தென்காசியில் 10.2 மி.மீ மழையும், செங்கோட்டையில் 17 மி.மீ மழையும், நான்குனேரியில் 1 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
கணிசமான நீர்வரத்து:
நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக நீடித்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3941 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 2,100 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 427 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 266 கனஅடியும், ராமநதி அணையில் 186 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 91 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 11 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 176 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 25 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
நீர்மட்டம் கணிசமாக உயர்வு:
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 82.20 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 54.20 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 2.20 அடி உயர்ந்து 64.10 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 6.50 அடி உயர்ந்து 58.00 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 4.65 அடி உயர்ந்து 36.09 அடியாகவும் இருந்தது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 6.50 அடி உயர்ந்து 100 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் மாலை நிலவரப்படி 8.50 அடி உயர்ந்து 100 அடியை எட்டியது.