ரீச் ஹெரிடேஜ் விருது பெற்ற சிதம்பரம் இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர்
சிதம்பரம் நகரில் நடராஜர் கோயில் தீர்த்தகுளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அக்குளங்களை மீட்டெடுத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியதற்காக இந்து ஆலய பாதுகாப்பு குழு தலைவர் மு.செங்குட்டுவன், செயலாளர் வி.சந்திரசேகர் ஆகியோருக்கு சென்னை ரீச் ஹெரிடேஜ் பவுன்டேஷன் என்ற அமைப்பு, ரீச் பவுன்டேஷன் அவார்டு என்ற உயரிய விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.

சிதம்பரம் நகரில் நடராஜர் கோயில் தீர்த்தகுளங்களான திருப்பாற்கடல், ஆயிகுளம், அண்ணா குளம், தச்சங்குளம், ஓமக்குளம், தில்லைக்காளியம்மன் கோயில் குளம், ஓமக்குளம், குளம் என 12 தீர்த்த குளங்கள் உள்ளன. இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி இக்குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுத்தது.
மேலும் வேங்கான் தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த திருப்பாற்கடல் தீர்த்த குளத்தை சட்ட போராட்டம், அறவழி போராட்டம் நடத்தி இக்குழு மீட்டது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் நகரில் உள்ள குளங்களை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியதற்காக இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், செயலாளர் வி.சந்திரசேகர் ஆகியோருக்கு ரீச் ஹெரிடேஜ் பவுன்டேஷன் அமைப்பு, உயரிய விருதான் ரீச் ஹெரிடேஜ் அவார்டு என்ற விருதினை கடந்த நவ.29-ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளர் கலைமாமணி வி.பாலக்குமாரன் முன்னிலையில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் வழங்கி கவுரவித்துள்ளார்.