தற்போதைய செய்திகள்

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை, ரொக்கம் திருட்டு

விருதுநகர் அருகே பாலவநத்தம் வடக்குபட்டியைச் சேர்ந்த செல்வராஜின் மனைவி கிருஷ்ணவேணி(33). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு திருத்தங்கலில் இருந்து விருதுநகர் செல்லும் பேருந்தில் ஏறி பயணம்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 6 சவரன் நகை மற்றும் ரொக்கம் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே பாலவநத்தம் வடக்குபட்டியைச் சேர்ந்த செல்வராஜின் மனைவி கிருஷ்ணவேணி(33). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு திருத்தங்கலில் இருந்து விருதுநகர் செல்லும் பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது, பேருந்தில் அதிக கூட்டமாக இருந்துள்ளது. பின்னர் ஆத்துப்பாலத்தை கடந்து பேருந்து சென்று கொண்டிருக்கும் போது கட்டப்பையை பார்த்துள்ளார். அதில், வைத்திருந்த ரூ.1500 உடன் பணப்பை மற்றும் கழுத்தியில் கிடந்த 6 சவரன் நகை ஆகியவை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து பழைய பேருந்து நிலையத்தில் இறங்கினார்.

பின்னர் இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

SCROLL FOR NEXT