முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை பெரிய தேர் சக்கரங்கள் பள்ளத்தில் சிக்கின

திருவண்ணாமலையில்  தீபத் திருவிழாவையொட்டி இன்று தேரோட்டோம் நடக்கிறது.  காலை 6.05 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து ஸ்ரீவிநாயகர் தேர் புறப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:34 AM
பகிர்:

திருவண்ணாமலையில்  தீபத் திருவிழாவையொட்டி இன்று தேரோட்டோம் நடக்கிறது.  காலை 6.05 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து ஸ்ரீவிநாயகர் தேர் புறப்பட்டது.

கோயில் இணை ஆணையர் இரா.செந்தில்வேலவன், நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் ஆகியோர் விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். விநாயகர் தேர், முருகர் தேர் நிலையம் திரும்பியதும் திருவண்ணாமலை பெரிய தேர் சரியா பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டது. சிறிது நேரத்தில் 1.20 மணிக்கு தேரடித் தெருவில் இருந்து திருவூடல் தெருவிற்கு திரும்ப முயன்ற போது திடீர் பள்ளம் ஏற்பட்டு தேரின் சக்கரங்கள் அந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டன. சுமார் 50 நிமிடங்களாக தேர் நகர முடியாமல் பள்ளத்தில் சிக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுப்பணித்துறையில் இருந்து பெரிய தகரங்கள் கொண்டு வரப்பட்டு தேரை நகர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.