முகப்பு
தற்போதைய செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சாவு

மதுரை அய்யர் பங்களாவைச் சேர்ந்தவர் பிச்சைக் கோனார் மகன் காமாட்சி (61). இவர் மின்வாரியத்தில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:40 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.

மதுரை அய்யர் பங்களாவைச் சேர்ந்தவர் பிச்சைக் கோனார் மகன் காமாட்சி (61). இவர் மின்வாரியத்தில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து கிருஷ்ணன்கோவில் நோக்கி திங்கள்கிழமை மாலை வந்து கொண்டிருந்தார். மதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், மூவரைவென்றான் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே காமாட்சி உயிரிழந்தார்.

நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →