முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் மறியல்: 105 பேர் கைது

சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை திருநெல்வேலியில் மறியல் போராட்டத்தில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:40 AM
பகிர்:

சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை திருநெல்வேலியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 105 பேர் கைது செய்யப்பட்டனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உணவூட்டும் செலவுத் தொகையினை ஒரு குழந்தைக்கு ரூ. 5 வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். தகுதியான சமையலர், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முட்டையை அவிப்பதற்கு அரசு தனியாக எரிபொருள் மான்யம் வழங்க வேண்டும். சர்க்கரை பொங்கலுக்கு வழங்கும் மான்யம் 33 பைசாவை ரூ. 5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சந்திப்பு பேரூந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு அமைப்பின் தலைவர் ஆர். ராசையா தலைமை வகித்தார். செயலர் கே. ராமையா, துணைத் தலைவர்கள் பி. காசியம்மாள், எஸ். தாவீது, எம். முருகையா, க. திரிபுரநாராயணன், இணைச் செயலர்கள் எஸ். சிவஞானம் எம். ஆறுமுகம், எம். இசக்கியப்பன், ஜி. முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கையை விளக்கி அமைப்பின் மாநில துணைத் தலைவர் வி. சங்கரவடிவு, மாவட்டப் பொருளாளர் எஸ். சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். ராஜேஸ்வரன், மாவட்டச் செயலர் வி. பார்த்தசாரதி, அறிவியல் கழக மாவட்டச் செயலர் கணபதி உள்ளிட்டோர் பேசினர்.

சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீஸாருக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறியலில் பங்கேற்ற 72 பெண்கள் உள்பட 105 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →