தற்போதைய செய்திகள்

ஆளுமை தினம் என்ற பெயரில் கிருஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்வது கண்டிக்கத்தக்கது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஆளுமை தின கொண்டாட்டம் என்ற பெயரில் டிச.25-ல் கிருஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

கே.பி. அம்​பி​கா​பதி

ஆளுமை தின கொண்டாட்டம் என்ற பெயரில் டிச.25-ல் கிருஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை,நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தது:

ஆளுமை தினம் என்ற பெயரில் டிச.25-ல் கிருஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்வதாக கூறப்படும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது.மத சார்பற்ற நாட்டில் இது நல்லதல்ல.குறிப்பாக கிருஸ்தவர்கள் மனதை புண்படுத்தவதோடு,மேலும் பல பின்விளைவுகளை ஏற்படுத்தும்.இலங்கையில் ராஜபக்சே,அதிபர் பதவியில் இருந்து தூக்கி எரியப்பட்டால்தான் இலங்கை தமிழர்கள்,தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகிடைக்கும்.எனவே அதற்கான நடவடிக்கைகளில் இந்தியாவும் ஈடுபடவேண்டும்.

தமிழகத்தில்,4,300 தனியார் பள்ளிகள் உள்ளன இங்கு படிக்கும் ஒரு மாணவனுக்கு தலா ரூ.100 வீதம் அதிகாரிகள் லஞ்சமாக பெறுவதாகவும் இளங்கோவன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT