முகப்பு
தற்போதைய செய்திகள்

காந்த படுகை மோசடி வழக்கு விசாரணைக்காக அருளானந்தம் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்

காந்தை படுகை மோசடி வழக்கு விசாரணைக்காக அருளானந்தம் திருச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

Updated On : 17 டிசம்பர், 2014 at 10:01 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:11 PM

காந்தை படுகை மோசடி வழக்கு விசாரணைக்காக அருளானந்தம் திருச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

கருமண்டபத்தைச் சேர்ந்தவர் அருளானந்தம். தற்போது சென்னையில் வசித்தது வரும் இவர், கடந்த 2002-ம் ஆண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் காந்த படுகை விற்பனை செய்து பல கோடி மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு ஆசிரியரை அடியாட்களை கொண்டு தாக்கிவிட்டு திருச்சியில் தலைமறைவான இவரை சென்னை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் காந்த படுகை மோசடி வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் அருளானந்த்தை சென்னை போலீஸார் புதன்கிழமை ஆஜர்படுத்தினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.