பிரிட்டன் தீவில் சிறை வைக்கப்பட்டுள்ள குமரி மீனவர்கள் உள்பட 120 பேரை மீட்க வலியுறுத்தல்
பிரிட்டன் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள டீகோ கார்சியா தீவில் அடைக்கப்பட்டுள்ள குமரி மாவட்ட மீனவர்கள் உள்பட 96 மீனவர்களையும், ஏற்கனவே அங்கு சிறை
பிரிட்டன் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள டீகோ கார்சியா தீவில் அடைக்கப்பட்டுள்ள குமரி மாவட்ட மீனவர்கள் உள்பட 96 மீனவர்களையும், ஏற்கனவே அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள 24 குமரி மீனவர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இந்திய பெருங்கடலின் அருகேயுள்ள தீவு டீகோ கார்சியா. இத் தீவு பிரிட்டன் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இத் தீவு பகுதியில் மீன்வளம் அதிகம் உள்ளதால் மீனவர்கள் இங்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். அங்கு 2 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 24 குமரி மாவட்ட மீனவர்கள் ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது 7 விசைப் படகுகளில் சென்ற தமிழ்நாடு, கேரள மீனவர்கள் உள்பட 96 பேர் பிரிட்டன் கப்பலில் வந்தவர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவர் தனது விசைப் படகில் இருந்த வயர்லெஸ் கருவி மூலம் இத் தகவலை பிற விசைப்படகு மீனவர்களுக்கு தெரிவித்தனர். அம் மீனவர்கள் வியாழக்கிழமை கரைக்கு திரும்பியதையடுத்து மீனவர்களின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனால் மீனவர்களின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Advertisement
ஏற்கனவே கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் மற்றும் தற்போது கைது செய்யப்பட்ட 96 மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்கி வருவதால் சிறையில் உள்ள மீனவர்களை காண அவர்களது குடும்பத்தினர் ஆவலாக உள்ளனர். இம் மீனவர்கள் தங்கள் உறவினர்களுடன் பேச மத்திய அரசு வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் பி. ஜஸ்டின் ஆன்டனி மத்திய அரசுக்கும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் மனுக்களை அனுப்பியுள்ளார்...