முகப்பு
தற்போதைய செய்திகள்

மணிமுத்தாறு அணையில் 2 ஆவது நாளாக 1,400 கனஅடி உபரிநீர் திறப்பு

வடகிழக்குப் பருவ தொடர்ந்து பெய்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இம்மாவட்டத்தில் நிரம்பாத

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

மணிமுத்தாறு அணை நிரம்பிய தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது நாளாக 1,400 கனஅடி உபரிநீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவ தொடர்ந்து பெய்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இம்மாவட்டத்தில் நிரம்பாத வடக்குப் பச்சையாறு அணை ஓரிரு நாளில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிமுத்தாறு அணை சனிக்கிழமை இரவு முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 2,175 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து உபரிநீர் வழிந்தோடி வழியாக 1,400 கனஅடி வெளியேற்றப்படுகிறது. பாசனத்திற்கு பிரதான கால்வாயில் 445 கனஅடியும், பெருங்கால் மதகு பாசனத்திற்கு  55 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 118 அடியாக உள்ளது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,751.76 கனஅடி நீர்வரத்து இருந்தது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து உபரிநீர் 3,184.17 கனஅடி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.10 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 142.29 அடியாகவும் இருந்தது. பாபநாசம் அணையில் மட்டும் 1 மி.மீ மழை பதிவாகியிருந்தது. கடனாநதி, ராமநதி அணைகள் நிரம்பிய நிலையில் இவ்விரு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்படுகிறது. 50 அடி கொள்ளளவை கொண்ட வடக்குப் பச்சையாறு அணைக்கு விநாடிக்கு 269.21 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 47.25 அடியாக இருந்தது. ஓரிரு நாளில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற அணைகளின் நீர்மட்டம்: கடனாநதி அணையின் நீர்மட்டம் 84.50 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 83 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 63.98 அடி, குண்டாறு அணை 36.10 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 95.50 அடி, நம்பியாறு அணை 22.96 அடி, கொடுமுடியாறு அணை 26 அடி.

முழு கட்டுரையைப் படிக்க →