தற்போதைய செய்திகள்

கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம்

விருதுநகரில் உள்ள என்.வி.அரங்கத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் சார்பில் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கான மாநில அளவிலான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எஸ். பாண்டியன்

கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகரில் உள்ள என்.வி.அரங்கத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் சார்பில் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கான மாநில அளவிலான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில் மாநில துணைத் தலைவர் அசோகன், மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றி பேசினார்கள்.

இதில், தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகளுக்கு ரேசன் பொருள்கள் வழங்குவதற்கு 33975 கடைகளில் 30 ஆயிரம் விற்பனையாளர்கள் உள்ளதாகவும்,  கூடுதலாக 2 அல்லது 3 கடைகளில் பணியாற்றுவதால் பணிச்சுமை ஏற்படுகிறது. இதைக் குறைக்கும் வகையில் உடனே ரேசன் கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றுகிற ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக கூட்டுறவு துறைக்கு வழங்க வேண்டிய மானியத் தொகையை உடனே தமிழக அரசு  வழங்க வேண்டும். மத்திய அரசு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரேசன் பொருள்களை வழங்குவதற்கு பொருள்களை ஒதுக்கீடு செய்யவும் மற்றும் அளவு குறைவாக வழங்குவதை தடுக்கும் வகையில் பொட்டல முறையை பின்பற்ற  வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தாண்டு ஜனவரி 25ம் தேதி 5 மண்டலங்களில் கோரிக்கை மாநாடு நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் நிறைவாக மாவட்ட பொதுச்செயலாளர் விஸ்வரூபகேசன் நன்றி கூறினார். இதில், மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT