முகப்பு
தற்போதைய செய்திகள்

குடும்பத் தகராறில் இரண்டு மாத குழந்தை அடித்துக்கொலை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே குடும்பத் தகராறில் இரண்டு மாதக் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்த தந்தையை

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:43 AM
பகிர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே குடும்பத் தகராறில் இரண்டு மாதக் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்த தந்தையை கை.களத்தூர் போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

வேப்பந்தட்டை அருகே உள்ள கை.களத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் நல்லமுத்து மகன் பாலமுருகன் (30). இவர், நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்த இருதயராஜ் மகள் வெண்ணிலாவை (20) காதலித்து, கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துகொண்டனராம். தம்பதியினருக்கு பிரதீப் என்ற 2 மாதக்குழந்தை உள்ளது. இதனிடையே, மனைவி வெண்ணிலா மீது சந்தேகப்பட்ட பாலமுருகன் அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தகராறில் வெண்ணிலாவை, பாலமுருகன் தாக்கினாராம். இதுகுறித்து புகார் அளிக்க, அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு செல்வதற்காக குழந்தையை தூக்கிக்கொண்டு வெண்ணிலா செல்ல முயற்சித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், குழந்தை பிரதீபை பிடுங்கி தரையை அடித்ததில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கை.களத்தூர் போலீஸார் பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2008ம் ஆண்டு அதே கிராமத்தை சேர்ந்த தங்கம்மாளை நகைக்காக கொலை செய்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தின் மூலம், பாலமுருகன் ஆயுள் சிறை தண்டணை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →