மனைவியை கொன்ற கணவர் தலைமறைவு:ஒரு மாதத்துக்கு பிறகு உடல் மீட்பு
கணவரால் கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணின் உடல் ஒரு மாதத்துக்கு பிறகு மீட்கப்பட்டது. தலைமறைவான கணவரை போலீஸார் தேடி
கணவரால் கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணின் உடல் ஒரு மாதத்துக்கு பிறகு மீட்கப்பட்டது. தலைமறைவான கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் ஜான்சிராணி(34). இவர் அதே பகுதியை சேர்ந்த விக்டர்(40) என்பவரை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு ஆண்டாக விக்டர் எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்து விட்டு ஜான்சிராணியுடன் தகராறு செய்து வந்தாக கூறப்படுகிறது.
இதனால் சில மாதங்களுக்கு முன் ஜான்சிராணி குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அங்கிருந்து மோகனூர் பகுதியில் உள்ள மணல் குவாரிக்கு வேலைக்கு சென்று வந்தார்.கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலைக்கு சென்ற ஜான்சிராணி மீண்டும் வீடு திரும்பவில்லை.
Advertisement
இதுகுறித்து அவரது தாய் ஜூலிமார்க்ரேட் மோகனூர் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸôர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை ஜான்சிராணி வேலை செய்து வந்த மணல் குவாரிக்கு அருகே உள்ள வாழை தோட்டத்தில் ஜான்சிராணியின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. உடல் அந்த இடத்திலேயே உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் அளிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், ஜான்சிராணி மகளிர் சுய உதவி குழுவில் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கி கொண்டு, மணல் குவாரி அருகே உள்ள வாழைத்தோப்பில் நடந்து வந்துபோது, அங்கு வந்த அவரது கணவர் விக்டர், ஜான்சிராணியிடம் பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் ஜான்சிராணி பணத்தை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்டர், ஜான்சிராணியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.
இதுகுறித்து மோகனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள விக்டரை தேடி வருகின்றனர்.