பாகிஸ்தான் பள்ளியில் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: வத்திராயிருப்பில் மௌன அஞ்சலி பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில், பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மௌன அஞ்சலி பேரணி நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்பாகிஸ்தான் பள்ளியில் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: வத்திராயிருப்பில் மௌன அஞ்சலி பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில், பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மௌன அஞ்சலி பேரணி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில், பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மௌன அஞ்சலி பேரணி நடைபெற்றது.
வத்திராயிருப்பு, ரெங்காராவ் அரிமா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ மாணவியர் பள்ளியில் தாளாளர் த.ஆரியன் மதுரம் தலைமையில், முதல்வர் ஜி.ரஷீலா தவமணி முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.பின்னர் மாணவர்கள் வத்திராயிருப்பின் முக்கிய வீதிகள் வழியே வன்முறைக்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கொண்டு மௌன அஞ்சலி பேரணியாக வந்தனர்.
நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு அரிமா சங்கத் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி, உறுப்பினர்கள் டாக்டர் பால்ச்சாமி, சாதுகணபதி, ஜெயபாலன், பள்ளியின் நிர்வாக அலுவலர் மாரியப்பன், முதல்வர் ஜி.ரஷீலா தவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணி பள்ளியில் நிறைவடைந்தது.