முகப்பு
தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் பல்கலை.யில் சர்வதேச ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்.கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் 4-வது சர்வதேச ஆலோசனைக் கூட்டம், சர்வதேச ஆராய்ச்சி மைய டீன் எஸ்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமையேற்று துணை வேந்தர் ச.சரவணசங்கர் பேசுகையில் கூறியதாவது:

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:47 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்.கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் 4-வது சர்வதேச ஆலோசனைக் கூட்டம், சர்வதேச ஆராய்ச்சி மைய டீன் எஸ்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமையேற்று துணை வேந்தர் ச.சரவணசங்கர் பேசுகையில் கூறியதாவது:

கலசலிங்கம் பல்கலைக்கழகம் உலகம் முழுவதிலும் உள்ள இருபது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அந்த ஒப்பந்தங்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காகவும், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பரிமாற்ற திட்டங்களை எளிதாக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வு நடவடிக்கைகளில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் செயல்திறன் சிறப்பாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடுவதன் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 138 இந்திய பல்கலைக்கழகங்களின் மத்தியில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் 78-வது இடத்தில் உள்ளது என்றார்.

இயக்குநர் ஆறுமுகம் பேசுகையில் கூறியதாவது: தைவான் நாட்டின் துங்காய் பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தைவான்-இந்திய அரசுகளிடம் இருந்து நிதித் திட்டங்கள் சமர்ப்பிப்பது உட்பட பலவித கூட்டு நடவடிக்கைகள் உருவாகும் என்றார்.துங்காய் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தாவ் மிங் வாங் பேசுகையில்:இந்த கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றார். மேலும் மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தை வெளிநாடுகளின் செமஸ்டர் திட்டம் போன்று அமல்படுத்தினால் எளிதாக இருக்கும் என்றும், கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவர்களுக்கு சீன மொழி கற்பிக்கும் திட்டத்தை துங்காய் பல்கலைக்கழகம் பரிசீலிக்கும் என்றும் கூறினார்.கலசலிங்கம் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள ஸ்லோவாகியாவின் கொஸீசே தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்ட்டின் பாகா பேசுகையில் கூறியதாவது:

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி ஒத்துழைப்பு மிகவும் எளிதாக இருந்தாலும், மாணவர்கள் பரிமாற்றத்தில் முன்னேற்றம் தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடல் அவசியம் என்றார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ கீ மெங் பேசுகையில் கூறியதாவது: கலசலிங்கம் பல்கலைக்கழகம் நகரத்தைவிட்டு ஒதுங்கி கிராமப்புறத்தில் இருந்தாலும், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்ற சிறந்த கல்வி நிறுவனமாக உள்ளது என்றார். கூட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்றனர். கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →