காரைக்காலில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர் இருவர் மாயம்
காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் பகுதி பட்டினச்சேரி மீனவ கிராமத்திலிருந்து மாரியப்பன் என்பவரது படகில் அவரும், ரத்தினசாமி, வெங்கடேசன் ஆகிய மூவரும் செவ்வாய்க்கிழமை காலை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

கடல் கடும் சீற்றமாக காணப்பட்ட நிலையில், நடுக்கடலில் படகு தலைக்கீழாக கவிழந்துவிட்டதால், அதிலிருந்த மூவரும் கடலுக்குள் மூழ்கினர்.
மாரியப்பன் மட்டும் நீந்தி கரையேறியுள்ளார். மற்ற இருவரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. தகவலின்பேரில் போலீஸார், நடக்க முடியாமல் கரை ஒதுங்கிக் கிடந்த மாரியப்பனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மற்ற இருவரை தேடும் பணியில் மீனவர்களும், கடலோரக் காவல்படையினரும் ஈடுபட்டுள்ளனர். கடல் சீற்றம் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.