தற்போதைய செய்திகள்

ராஜபாளையம் அருகே குழந்தையுடன் தாய் மாயம் கணவர் புகார்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரைச் சேர்ந்த மாயக்கண்ணனின் மனைவி காமலட்சுமி(32). இவர் கடந்த 25-ம் தேதி தனது வீட்டிலிருந்து ஒன்றைரை வயது குழந்தை

எஸ். பாண்டியன்

ராஜபாளையம் அருகே தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் மாயமான சம்பவம் தொடர்பாக சேத்தூர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரைச் சேர்ந்த மாயக்கண்ணனின் மனைவி காமலட்சுமி(32). இவர் கடந்த 25-ம் தேதி தனது வீட்டிலிருந்து ஒன்றைரை வயது குழந்தை மகாலட்சுமியுடன் கடைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றாராம். அதையடுத்து நீண்டநேரமாகியும் வீடு  திரும்பிவில்லையாம். இதனால் கவலையடைந்த கணவர் மாயக்கண்ணன் தனது உறவினர்களின் வீடுகளில் சென்று விசாரித்துள்ளார். ஆனால், தனது மனைவி எங்கிருக்கிறார் என்கிற விவரம் தெரியவில்லையாம். இதையடுத்து, செவ்வாய்கிழமை இரவு சேத்தூர் காவல் நிலையத்தில் மாயக்கண்ணன் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் மாயமான காமலட்சுமி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

SCROLL FOR NEXT