வேன் - லாரி மோதல்: உளுந்தூர்பேட்டை மாநாடு சென்று திரும்பிய தேமுதிகவினர் 13 பேர் காயம்
விருதுநகர் அருகே நின்றிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் தேமுதிகவினர் 13 பேர் காயம் அடைந்தனர்.
விருதுநகர் அருகே நின்றிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் தேமுதிகவினர் 13 பேர் காயம் அடைந்தனர்.
கோவில்பட்டியிலிருந்து உளூந்தூர்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாநாட்டிற்கு வேன் மூலம் கௌதம்ராஜ் தலைமையில் 20 பேர் சென்றனர். இதையடுத்து மாநாடு முடிந்து இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது, விருதுநகர் எம்.ஜி.ஆர். சிலை அருகே திங்கள்கிழமை அதிகாலையில் வேனை நிறுத்தி தேநீர் குடிப்பதற்காக ஒரு சிலர் இறங்கியுள்ளனர். மற்றவர்கள் உள்ளே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
அப்போது, விருதுநகரில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்ற லாரி வேனின் பின்புறமாக மோதி தலைகுப்புற கவிழந்தது. இந்த விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த சுந்தராஜ்(30), செந்தூரன்(48), சந்திரசேகரன்(45), சுப்புராஜ்(53), திருப்பதி(64), கிருஷ்ணசாமி(75), ரவீந்திரன்(52), லிங்கம்(35), மகேந்திரன்(19) உள்ளிட்ட 13 பேர் காயம் அடைந்தனர்.
Advertisement
உடனே இச்சம்பவம் குறித்து அறிந்த பஜார் காவல் நிலைய போலீஸார் விரைந்து காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கோவில்பட்டியைச் சேர்ந்த கௌதம்ராஜ் புகார் செய்தார். அதன் பேரில் லாரி டிரைவரான களியக்காவிளையைச் சேர்ந்த குத்தாலிங்கம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.