மின் கம்பத்தில் மோதிய கல்லூரி மினி பஸ் எறிந்து சாம்பல்
திருவாடானை தாலுகா ஆனாந்தூர் அருகே தேவகோட்டையை சேர்ந்த சேவியர் பலிடெக்னிக்கு கல்லூரி மினி பஸ் மின் கம்பத்தில் மோதி எறிந்து சாம்பலானது மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
திருவாடானை தாலுகா ஆனாந்தூர் அருகே தேவகோட்டையை சேர்ந்த சேவியர் பலிடெக்னிக்கு கல்லூரி மினி பஸ் மின் கம்பத்தில் மோதி எறிந்து சாம்பலானது மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சிவகங்கை மாவட்ட தேவகோட்டை அருகே முள்ளிகுண்டு கிராமத்தில் உள்ளது சேவியர் பாலிடெக்னிக் இங்கு உள்ள மினி பேருந்து மாணவர்களை ஏற்றுவதற்காக ஆனந்தூர் சென்று செவ்வாய்கிழமை காலை மாணவர்களை ஏற்றி கொண்டு வரும் போது ஆனாந்தூர் அருகே புளிச்சவயல் கிராமத்தில் எதிரே வந்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு வழி விடும் போது எதிர்பாரதவிதமாக மின் கம்பத்தில் மோதியதால் மினி பஸ் தீ பிடித்து கொண்டது உடனடியாக மாணவர்கள் குதித்து உயிர் தப்பினார்கள் மின் பஸ் முற்றிலும் எரிந்து சாம்பலானது இது குறிóத்து திருவாடானை தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தீ அணைப்பு துறை அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் குழுவினர் தீ அணைத்தனர்.
தகவலறிந்து ஆர் எஸ் மங்கலம் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ் ஓட்டுனர் ராஜேந்திரனை(33)கைது செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.