முகப்பு
தற்போதைய செய்திகள்

மூன்றாவது அணி அமைந்து ஜெயலலிதா பிரதமர் ஆனால் சந்தோஷமே: கருணாநிதி

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் பிரசாந்த் பூஷண் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பொய் என திமுக தலைவர் கருணாநிதி

Updated On : 4 பிப்ரவரி, 2014 at 8:53 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:49 AM

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் பிரசாந்த் பூஷண் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பொய் என திமுக தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அவர் அளித்த பதில்:

கேள்வி: ஆம் ஆத்மி கட்சியின் பிரசாந்த் பூஷண், போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் பேசிய பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி, ஆவணங்களை திருத்தியதாக சொல்லியிருக்கிறாரே

Advertisement

பதில்: எல்லாம் பொய்.

கேள்வி: உங்கள் மீதும் குற்றச்சாட்டியிருக்கிறாரே

பதில்: மற்ற தலைவர்களிடம் இதுபோல கேள்வி கேட்க முடியுமா

கேள்வி: நிருபராக இருந்த நீங்கள் இப்படிச் சொல்லலாமா

பதில்: அதனால் தான் உங்களை மதித்து  நடந்து வருகிறேன். இப்போது மதிக்கிறேன். அதனால் தான் அங்கு நின்று கொண்டிருந்த உங்களையெல்லாம் அருகில் அழைத்துப் பேசுகிறேன்.

கேள்வி: தமிழக டிஜிபி ராமானுஜத்தின் பதவிக் காலத்தை நீடித்துள்ளார்களே

பதில்: அது பற்றி எனக்குத் தெரியாது.

கேள்வி: மூன்றைவது அணியின் சார்பில், இந்தத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடப் போவதாகவும், அவர் வெற்றி பெற்றால் பிரதமர் ஆவார் என்றும் சொல்லப்படுகிறதே

பதில்: ஆனால் சந்தோஷம்.

இவ்வாறு கருணாநிதி பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.