தற்போதைய செய்திகள்

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிடம் 9 சவரன் நகை திருட்டு

விருதுநகர் அருகே ஓடும் பேருந்தில் இளம்பெண்ணின் பையில் இருந்த 9 சவரன் நகை, கைபேசி மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ஓடும் பேருந்தில் இளம்பெண்ணின் பையில் இருந்த 9 சவரன் நகை, கைபேசி மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சண்முநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பியின் மனைவி சுதா(27). இவர் திருமங்கலம் சமத்துவபுரம் அருகே உள்ள காமாட்சிபுரத்திற்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு திங்கள்கிழமை மாலையில் சென்றாராம். அதில் பங்கேற்று விட்டு கிராமத்திற்கு செல்வதற்காக சமத்துவபுரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்துள்ளார். இங்கிருந்து திருமங்கலம்-விருதுநகர் நோக்கிச் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பஸ்ஸிலும் கூட்டமாக அதிகமாக இருந்துள்ளது.

இதை மர்ம நபர்கள் சாதகமாக பயன்படுத்தி சுதா வைத்திருந்த கட்டப்பையில் இருந்து நகைப்பையை திருடியுள்ளனர். இதையறியமால் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி பையை பார்த்துள்ளார். அப்போது உள்ளேயிருந்த நகைப்பையில் 9 சவரன் நகை, கைபேசி மற்றும் ரூ.500 ரொக்கம் ஆகியவை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்குச் சென்று புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர்கள் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT