தற்போதைய செய்திகள்

தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

விருதுநகர் வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி வளாகத்தில் தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்

எஸ். பாண்டியன்

தமிழகத்தில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதல்வர் நிறைவேற்றி வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

விருதுநகர் வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி வளாகத்தில் தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி முன்னிலை வகித்தார். இதில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் ஏழைகளின் சிரமத்தை போக்கும் வகையில் படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். எதிர் கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் எப்படி வழங்க முடியும் என கேள்வி எழுப்பினர். அந்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே தமிழக நிதியிலிருந்து தங்கம் வழங்கி சொன்னதைச் செய்யும் முதல்வராக திகழ்கிறார். அதேபோல், சமூக மேம்பாட்டு திட்டங்களானலும், தொலைநோக்குத் திட்டங்களனாலும் 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளார் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT