வரதட்சணை கொடுமை செய்ததாக மனைவி புகார்: கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் அருகே வரதட்சணை கொடுமைப்படுத்தியதாக மனைவி புகாரின் பேரில் கணவர் உள்ளிட்ட உறவினர்கள் 6 பேர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு
விருதுநகர் அருகே வரதட்சணை கொடுமைப்படுத்தியதாக மனைவி புகாரின் பேரில் கணவர் உள்ளிட்ட உறவினர்கள் 6 பேர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாத்தூர் அருகே பாரதி நகரைச் சேர்ந்தவர் ராஜக்கானி(27). இவருக்கும் விருதுநகர் அருகே உள்ள வி.சுந்தரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமியின் மகன் சேர்மக்கனி(30) என்பவருக்கும் கடந்த 25.5.2012 அன்று திருமணம் நடைபெற்றதாம். அப்போது, வரதட்சணையாக பெண் வீட்டார் 20 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கமும் கொடுத்தார்களாம். ஆனால், கணவர் வீட்டில் கடன் உள்ளதாகக் கூறி நகையை அடகு வைக்க கேட்டார்களாம்.
அதற்கு ராஜக்கனி மறுப்பு தெரிவித்துள்ளார். இதைக் காரணமாக வைத்து மேலும் 5 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளை கொண்டு வர வேண்டும் என கணவர் வீட்டைச் சேர்ந்தவர்கள் கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் புகார் செய்ததன் பேரில் விசாரித்து வழக்கு பதிவு செய்த உத்தரவிட்டது. அதன் பேரில் கணவர் சேர்மக்கனி, தந்தை கருப்பசாமி, தாயார் சுப்புத்தாய், சகோதரரி பாண்டியம்மாள், சகோதரர் கணேசன் மற்றும் உறவினர் முத்துப்பாண்டி உள்ளிட்ட 6 பேர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Advertisement